தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/தயாரிப்பு துறை வளர்ச்சி அக்டோபரில் சரிவு

தயாரிப்பு துறை வளர்ச்சி அக்டோபரில் சரிவு

தயாரிப்பு துறை வளர்ச்சி அக்டோபரில் சரிவு


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி குறைவின் காரணமாக, நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில் சற்று சரிவு கண்டுள்ளதாக, ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் மாதாந்திர பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, தயாரிப்பு துறை வளர்ச்சியை குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு கடந்த செப்டம்பரில் 55.1 ஆக இருந்த நிலையில், அது அக்டோபரில் 54.7 ஆக குறைந்துள்ளது.

இந்த குறியீடு 50க்கு மேல் இருந்தால் உற்பத்தி துறை வளர்ச்சி பாதையில் இருப்பதாகவும், 50க்கு கீழ் இருந்தால் சரிவைக் குறிப்பதாகவும் பொருள். அந்த வகையில், அக்டோபரில் குறியீடு சரிந்தாலும், தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே இந்திய உற்பத்தி துறை நீடிக்கிறது.

மேலும், அதன் நீண்டகால சராசரியைவிடவும் குறியீடு அதிகமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us