தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘சிப்’ தட்டுப்பாட்டால் ஆட்டோ மீட்டர் மாற்றும் பணி தாமதம்

‘சிப்’ தட்டுப்பாட்டால் ஆட்டோ மீட்டர் மாற்றும் பணி தாமதம்

‘சிப்’ தட்டுப்பாட்டால் ஆட்டோ மீட்டர் மாற்றும் பணி தாமதம்


UPDATED : நவ 02, 2026 06:51 PM

ADDED : நவ 02, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 06:51 PM ADDED : நவ 02, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணத்துக்கு ஏற்ப, மீட்டர்களை மாற்றியமைக்கும் பணி, மின்னணு சிப் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் ஒரு மாதம் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ மீட்டர்களில் புதிய கட்டண விகிதங்களை பதிவு செய்வதற்கு தேவையான 'ஐ.சி.,' சிப்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. இதுகுறித்து, தமிழ்நாடு ஆட்டோ மீட்டர் மெக்கானிக்குகள் சங்க செயலர் எம்.அயூப் கான் கூறியதாவது:

தமிழகம் முழுதும் சுமார் 4.20 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், மீட்டர்களை மாற்றியமைக்க 150 மெக்கானிக்குகள் மட்டுமே உள்ளனர். சென்னையில் ஒரு லட்சம் ஆட்டோக்களுக்கு 45 மெக்கானிக்குகள் உள்ளனர்.தேவையான சிப்கள் மற்றும் உதிரிபாகங்களை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம். அவை கிடைத்த பிறகே மீட்டர்களை மாற்றியமைக்கும் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, சிப் மற்றும் உதிரிபாகங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய, மீட்டர் தயாரிப்பாளர்கள், மெக்கானிக்குகளுடன் போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியுள்ளது.ஆட்டோ உரிமையாளர்கள் புதிய கட்டணத்துக்கு ஏற்ப மீட்டர்களை மாற்றியமைக்க ஆறு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us