
5 மியூச்சுவல் பண்டு திட்டங்கள் ஜியோபிளாக்ராக் அறிமுகம்
ஜியோபிளாக்ராக் சொத்து மேலாண்மை நிறுவனம், நேற்று முதல்முறையாக 5 இண்டெக்ஸ் பண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50, மிட்கேப் 150, ஸ்மால்கேப் 250, 8 முதல் 13 ஆண்டுகள் வரையிலான இண்டெக்ஸ் பண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்திய முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான, குறைந்த செலவில், டிஜிட்டல் வடிவில் சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. புதிய பண்டுகளில் வரும் 12 வரை முதலீடு செய்யலாம்.
புதிய பங்கு வெளியீடுக்கு டாடா கேப்பிடல் விண்ணப்பம்
டாடா குழுமத்தை சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான டாடா கேப்பிடல், புதிய பங்கு வெளியீடு வாயிலாக முதலீட்டை திரட்ட விண்ணப்பித்து உள்ளது. ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 26.58 கோடி பங்குகளுடன், 21 கோடி புதிய பங்குகள் விற்பனை என, ஐ.பி.ஓ., வாயிலாக மொத்தம் 47.58 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டு உள்ளது.
அதானி போர்ட்ஸ் தலைவர் பதவி விலகினார் கவுதம் அதானி
அதானி குழுமத்தை சேர்ந்த அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து, கவுதம் அதானி நேற்று முதல் பதவி விலகுவதாக பங்கு சந்தையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் கவுரவ தலைவராக அதானி பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் கூடுதல் இயக்குநராக மணிஷ் கெஜ்ரிவால் மூன்றாண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.