
ஹீரோ மோட்டார்ஸ்
டில்லியை தலைமையிடமாக கொண்ட வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டார்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக முன்னர், 900 கோடி ரூபாய் திரட்ட விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அதை 1,200 கோடி ரூபாய் அதிகரித்து, மீண்டும் விண்ணப்பித்து உள்ளது. ஏற்கனவே முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 400 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 800 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
சாடோபேக்ஸ் டெக்னாலஜீஸ்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, நாடு முழுதும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு தளவாடச் சேவைகளை வழங்கி வரும் சாடோபேக்ஸ் டெக்னாலஜீஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட செபியிடம் ரகசிய முறையில் விண்ணப்பித்து உள்ளது.
ரேமண்ட் ரியாலிட்டி
ரேமண்ட் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிந்த, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தின் ரேமண்ட் ரியால்ட்டி பங்குகள் நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாளான நேற்று, தேசிய பங்கு சந்தையில் 1,000 ரூபாய்க்கு பட்டியலான பங்குகள், 4 சதவீத சரிவுடன் 999 ரூபாயுடனும்; மும்பை பங்கு சந்தையில் 1,005 ரூபாய்க்கு பட்டியலான பங்குகள், 4 சதவீத சரிவுடன், 962.50 ரூபாய் அளவில் வர்த்தகமாகின.