சந்தை மதிப்பு ரூ.1,900 கோடி ஆர்டர் மதிப்பு ரூ.2,041 கோடி
சந்தை மதிப்பு ரூ.1,900 கோடி ஆர்டர் மதிப்பு ரூ.2,041 கோடி
ADDED : டிச 07, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்:ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட, 'கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ்' நிறுவனம், தன் சந்தை மதிப்பைவிட கூடுதல் தொகைக்கு, ரயில்வே துறையின் ஆர்டரை பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கருவிகளை வினியோகிக்கும் கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1,900 கோடி ரூபாய்.
இந்நிறுவனம், ரயில்கள் மோதலைத் தவிர்க்க இன்ஜினில் பொருத்தப்படும், 2,500 'கவச்' கருவிகளை, 'சித்தரஞ்சன் லோகோமோடிவ் வொர்க்ஸ்' நிறுவனத்திடம் இருந்து பெற்று வினியோகிக்க, ரயில்வேயிடம் ஆர்டரை பெற்றுள்ளது. இதன் மதிப்பு 2,041 கோடி ரூபாய்.
கவச் கருவிகளின் வினியோகம், பொருத்துதல், சோதித்தல் மற்றும் இயக்க பராமரிப்பு ஆகிய பணிகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும். இந்த ஆர்டர் பெறப்பட்டதால், கெர்னெக்ஸ் நிறுவன பங்கு விலை, நேற்று 5 சதவீதம் வரை உயர்வு கண்டது.