ADDED : டிச 18, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:'மாருதி சுசூகி இந்தியா' நிறுவனம், நடப்பாண்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான கார்களை தயாரித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம், ஒரே ஆண்டில் 20 லட்சத்துக்கும் கூடுதலான கார்களை தயாரிப்பது, இதுவே முதல்முறை. நிறுவனத்தின் 'எர்டிகா' பிராண்டு கார் தான் 20 லட்சமாவது காராக தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்த கார்களில் 60 சதவீதம் ஹரியானா மாநிலத்திலும்; 40 சதவீதம் குஜராத்திலும் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பலேனோ, ப்ரான்க்ஸ், எர்டிகா, வேகன்ஆர், பிரீஸ்ஸா' ஆகிய ஐந்து மாடல் கார்களே, நடப்பாண்டில் அதிகளவு தயாரிக்கப்பட்டதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.