மொரீஷியஸ் ஆடை ஏற்றுமதி சரிவு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
மொரீஷியஸ் ஆடை ஏற்றுமதி சரிவு சிறப்பு கவனம் செலுத்த எதிர்பார்ப்பு
ADDED : டிச 29, 2025 01:41 AM

திருப்பூர்: மொரீஷியஸ் நாட்டுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் இருந்தும், மந்தமாகியுள்ள ஆடை ஏற்றுமதியை மேம்படுத்தும் திட்டம் தயாரிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலகளாவிய வர்த்தகத் தில், பரஸ்பரம் வரிச்சலுகை யில் ஏற்றுமதி மற்றும் இறக் குமதி செய்ய ஏதுவாக, நட்பு நாடுகள் இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ், நார்வே, ஐஸ்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.
கடந்த 2023-24ம் நிதியாண்டில், மொரீசியஸ்க்கு, 324 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த நிதியாண்டில் 348 கோடி ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்தே, மொரீஷியஸ் ஏற்றுமதி மந்தமடைந்துஉள்ளது.
கடந்த, 2024-25ம் நிதியாண்டில், ஏப்., முதல் செப்., வரையிலான ஆறு மாதங்களில், மொரீஷியஸ்க்கான ஆடை ஏற்றுமதி, 180 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 152 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில் கணக்கிடும்போது, முந்தைய ஆண்டை காட்டிலும், 19 சதவீதம் ஏற்றுமதி குறைந்து ள்ளது.
ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,' தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தும், மொரீஷியஸ் ஏற்றுமதி கடந்த சில மாதங்களாக பின்னடைவை சந்தித்து வருகிறது.
சீனா உள்ளிட்ட நாடுகளின் போட்டியை சமாளித்து, மொரீஷியஸ் உடனான வர்த்தகத்தை மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் மொரீஷியஸ்க்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகம், மீண்டும் வளர்ச்சி அடைய வேண்டும்' என்றனர்.

