'மதுரை -- துாத்துக்குடி வழித்தடத்தில் ராணுவ தொழிற்சாலைகள் தேவை'
'மதுரை -- துாத்துக்குடி வழித்தடத்தில் ராணுவ தொழிற்சாலைகள் தேவை'
ADDED : மே 17, 2025 12:29 AM

சென்னை,:மதுரை - துாத்துக்குடி நான்குவழிச் சாலை பகுதியில், ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம்:
'மேக் இன் இந்தியா' திட்டம் வாயிலாக, பல முக்கிய தயாரிப்புகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மதுரை - துாத்துக்குடி தொழில் வழித்தட அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இதுவரை பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.
இந்த பகுதியில் ராணுவத்துக்கு தேவையான இரு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், வேலைவாய்ப்பு உருவாகும். இந்த பகுதியில் விவசாயம் அதிகம் இல்லாத காரணத்தால், மக்களின் நலன் கருதி, விரைவில் ராணுவ தொழிற்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.