ADDED : ஜூலை 28, 2026 01:15 AM

சென்னை: பின்தங்கிய மாவட்டங்களில், முன்னுரிமை அடிப்படையில் மினி டைடல் பார்க் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசு தகவல் சேகரித்து வருகிறது.
மாநிலத்தின் பல பகுதிகளில் வசிப்போர், தகவல் தொழில்நுட்ப துறை வேலைக்காக சென்னை வருகின்றனர். இதை தடுக்க, முக்கிய நகரங்களில், 50,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது, கோவை, திருவள்ளூர் பட்டாபிராமில் பெரிய அளவில் டைடல் பார்க் கட்டடங்களும், விழுப்புரம், தஞ்சை, சேலம், துாத்துக்குடி, வேலுார், திருப்பூர், காரைக்குடியில் மினி டைடல் பார்க்குகளும் உள்ளன.
மதுரை, திருச்சி பெரிய டைடல் பார்க், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, விருதுநகர், ஈரோடு, திருநெல்வேலியில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டு வரும் நிலையில், ஓசூர், நாகையில் அமைக்க வடிவமைப்பு பணி நடக்கிறது.
தற்போது, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
