sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா

/

 ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா

 ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா

 ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா


UPDATED : பிப் 02, 2026 04:35 AM

ADDED : பிப் 02, 2026 03:26 AM

Google News

UPDATED : பிப் 02, 2026 04:35 AM ADDED : பிப் 02, 2026 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மத்திய நிதி அமைச்சராக நியமித்தார்.

அடுத்ததாக, 2024ல் பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ந்தார்.

கடந்த 2019 மே 31ல் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற இவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை வழிநடத்தி, இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக மாற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் வரை, நிர்மலா சீதாராமன் தன் பதவி காலத்தில் ஆறு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நேற்று அவர் தாக்கல் செய்தார்.

கடந்த 1950ல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற சி.டி.தேஷ்முக், ஆறு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் பதவியில் இருந்தார். இந்த சாதனை, நிர்மலா சீதாராமனால் முறியடிக்கப் பட்டது.

அதேபோல், முந்தைய நிதி அமைச்சர்கள் பல்வேறு பிரதமர்களின் கீழ் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், ஒரே பிரதமரின் கீழ், ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1959 - 1964 வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஆறு பட்ஜெட்களையும், 1967 - 1969க்கு இடையிலான காலகட்டத்தில் நான்கு பட்ஜெட்களையும் தாக்கல் செய்தார். இவர், வெவ்வேறு பிரதமர்களின் தலைமையில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.

முன்னாள் நிதியமைச்சர்களான சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் வெவ்வேறு பிரதமர்களின் கீழ் முறையே ஒன்பது மற்றும் எட்டு பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்து உள்ளனர்.

• சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்: 1947 நவ., 26ல், அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது • நீண்ட பட்ஜெட் உரை: 2020 பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் அதற்கான உரையை வாசித்தார். இதன் வாயிலாக, மிக நீண்ட பட்ஜெட் உரை ஆற்றியவர் என்ற சாதனையை அவர் படைத்தார் • குறுகிய பட்ஜெட் உரை: 1977ல் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட் உரை, 800 வார்த்தைகளுடன் முடிவுற்றது.

காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து வந்த நிதியமைச்சர் ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, நாட்டின் கைத்தறி பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புடவைகளை அணிந்து வருவதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த ஆண்டு, அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப்புடவை அணிந்திருந்தார். அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து வந்தது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.








      Dinamalar
      Follow us