ரூ.600 கோடியில் 'மதர் டெய்ரி'யின் பதப்படுத்துதல் ஆலை
ரூ.600 கோடியில் 'மதர் டெய்ரி'யின் பதப்படுத்துதல் ஆலை
ADDED : மார் 31, 2025 12:59 AM

புதுடில்லி:குஜராத், ஆந்திராவில் 600 கோடி ரூபாய் முதலீட்டில் பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தும் ஆலைகளை மதர் டெய்ரி நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இயங்கி வரும் பால் நிறுவனமான மதர் டெய்ரி நிறுவனம், குஜராத்தின் பரோடா அருகே உள்ள இடோலாவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் ஆலையை நிறுவ உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் இரண்டாண்டுகளில் நிறைவடையும் எனவும், இதைத் தொடர்ந்து, ஆந்திராவின் குப்பத்தில் 150 முதல் 200 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது ஆலை அமைக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஜார்க்கண்ட், கர்நாடகா, புதுடில்லி ஆகிய மூன்று இடங்களில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இவை ஆண்டுதோறும் 2 லட்சம் டன் விளைபொருட்களை பதப்படுத்துகின்றன.