உணவு பதப்படுத்துதல் ஊக்குவிப்பு மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்
உணவு பதப்படுத்துதல் ஊக்குவிப்பு மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஒப்பந்தம்
ADDED : ஜூலை 01, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக அரசின் சிறு, குறு தொழில் துறையின் கீழ் செயல்படும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், தோட்டக்கலை, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், பால், இறைச்சி, மீன்வளம், சார்ந்த துறைகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மதிப்பு கூட்டவும் உதவுகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக, மெட்ராஸ் ஐ.ஐ.டி., தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேலாண்மை நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகிய நான்கு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.