ADDED : ஏப் 15, 2025 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழுமம், செமிகண்டக்டர் வடிவமைப்பில் கால்பதித்துள்ளது. முருகப்பா குழுமத்தின் 'சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்டிரியல் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் 'ஆக்சிரோ செமிகண்டக்டர்'.
இந்நிறுவனம், பெங்களூரில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முதலீட்டில், செமிகண்டக்டர் வடிவமைப்பு மையத்தை துவங்கியுள்ளது. அதாவது, இங்கு செமிகண்டக்டர் வடிவமைப்பு பணிகள் மட்டுமே நடைபெறும்; தயாரிப்பு பணிகள் வேறு ஒரு நிறுவனத்திடம் வழங்கப்படும்.
சிப் வடிவமைப்பின்போது, 5ஜி, 6ஜி தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்துறை இணையதள தேவைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.