பிரதான பட்டியலுக்கு மாறுவதற்கு எஸ்.எம்.இ.,களுக்கு புது விதிகள் தேசிய பங்கு சந்தை அறிவிப்பு
பிரதான பட்டியலுக்கு மாறுவதற்கு எஸ்.எம்.இ.,களுக்கு புது விதிகள் தேசிய பங்கு சந்தை அறிவிப்பு
ADDED : ஏப் 24, 2025 11:51 PM

புதுடில்லி:தேசிய பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்படுள்ள நிறுவனங்கள், பிரதான பட்டியலுக்கு மாறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதன் விபரங்கள் பின்வருமாறு:
1மூலதனம்: விண்ணப்பிக்கும் எஸ்.எம்.இ., நிறுவனங்களின் பங்குதாரர்கள் செலுத்திய மூலதனமான 'பெயிடு அப் கேப்பிடல்', குறைந்தபட்சம் 10 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். பட்டியலிடப்படும்போது, நிறுவனத்தின் மூலதனம் 100 கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்கக்கூடாது.
2வருவாய்: முந்தைய நிதியாண்டில், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். மேலும், முந்தைய மூன்று நிதியாண்டுகளில் குறைந்தபட்சம் இரண்டில், நேர்மறையான செயல்பாட்டு லாபம் ஈட்டியிருக்க வேண்டும்.
3பட்டியலிடும் காலம்: தேசிய பங்குச் சந்தையின் எஸ்.எம்.இ., தளத்தில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
4பொது பங்குதாரர்கள்:  பிரதான சந்தையில் பட்டியலிட விண்ணப்பம் தாக்கல் செய்யும் போது, எஸ்.எம்.இ., நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 500 பொது பங்குதாரர்களாவது இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை முன்பு 1,000 ஆக இருந்தது.
5நிறுவனர் மற்றும் நிறுவனர் குழுமம்: விண்ணப்பத்தின் போது, எஸ்.எம்.இ., நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிறுவனர் குழுமம் இந்நிறுவனத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத பங்குகளை வைத்திருக்க வேண்டும். மேலும், பிரதான சந்தையில் பட்டியலிடப்படும் போது, இவர்களின் பங்கு விண்ணப்பத்தின் போது இருந்ததில், குறைந்தபட்சம் 50 சதவீதமாவது இருக்க வேண்டும்.

