ADDED : மார் 29, 2025 11:43 PM

அதிகரித்து வரும் தேவை காரணமாக, இயற்கை வைரத்தின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலகின் முக்கிய சந்தைகளில் அதிகரித்து வரும் நுகர்வோர் தேவை காரணமாக, இயற்கை வைரத்தின் விலை, கடந்த இரண்டு மாதங்களில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த நுகர்வோரின் தேவை அதிகரிப்பே, இயற்கை வைரம் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தாண்டு முழுதும் தொடரும் என, தொழில்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
காரட், வெட்டு, நிறம் மற்றும் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், விலை வேறுபட்டாலும், நல்ல தரமான வைரத்தின் சராசரி விலை தற்போது காரட் ஒன்று 5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ஜனவரி துவக்கத்தில் 4.5 லட்சம் ரூபாயாக இருந்தது. அதிகம் பயன்படுத்தப்படும் வைரத்தின் விலை, 2.7 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.