ADDED : நவ 14, 2024 03:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த 'இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்' நிறுவனத்தின் தலைவராக, அரவிந்தர் சிங் சாஹ்னி, 54, நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாஹ்னி தற்போது இந்நிறுவனத்தின் வணிக வளர்ச்சி பிரிவின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது. இடைக்கால ஏற்பாடாக, நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு இயக்குனர் சதீஷ்குமார் வடுகுரிக்கு தலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது.