நிகர அன்னிய நேரடி முதலீடு 4,300 கோடி ரூபாயாக சரிவு
நிகர அன்னிய நேரடி முதலீடு 4,300 கோடி ரூபாயாக சரிவு
ADDED : ஜன 18, 2025 11:37 PM

புதுடில்லி:கடந்த ஆண்டில், ஏப்ரல் - நவம்பர் காலத்துக்கு இடையே, நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நிகர அன்னிய நேரடி முதலீடு வெறும் 4,300 கோடி ரூபாய் மட்டுமே. இதற்கான தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 73,000 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீடு 4.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், திரும்பப் பெறப்பட்ட முதலீடு மற்றும் இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டை கணக்கில் கொள்ளும்பட்சத்தில், நிகர முதலீடு 4,300 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு அதிகப்படியான முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதே போல இந்த காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட அன்னிய நேரடி முதலீடு 1.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது கடந்த 2023ல் 76,500 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

