ADDED : பிப் 12, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, வருமான வரி உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில், எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டுமென்பதில் பலருக்கு நிலவும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், வருமான வரித்துறை, தன் இணையதளத்தில் புதிய கால்குலேட்டர் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில், வருமான விபரங்களை உள்ளிட்டு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையில் செலுத்த வேண்டிய வருமான வரியை அறிந்து கொள்ளலாம்.