உள்ளடக்கத்திற்கு செல்ல
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 05, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதிதாக அமைக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை சீரமைத்து பராமரிக்கவும் தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அரசு துறைகள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள நிதி ஒதுக்கீடு அல்லது மாவட்ட அவசர திட்டங்கள் வாயிலாக இப்பணிகளை மேற்கொள்ளலாம். பணிகளை முடிக்க தனி காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. புதிய வழிகாட்டுதலில் கட்டட வகை, மொட்டை மாடி பரப்பளவு மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
