தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/புத்தொழில் செய்திகள்

புத்தொழில் செய்திகள்

புத்தொழில் செய்திகள்


UPDATED : நவ 04, 2026 12:29 PM

ADDED : நவ 04, 2026 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:29 PM ADDED : நவ 04, 2026 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. வாடிக்கையாளர் சேவைக்கு ‘பிளெட்ச்’ மென்பொருள் அறிமுகம்



பெங்களூரை சேர்ந்த 'ஆரோஹெட் ஏ.ஐ.' நிறுவனம், வாடிக்கையாளர் சேவை தகவல்களுக்கான 'பிளெட்ச்' எனும் புதிய குரல் ஏ.ஐ., மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் இயங்கும் இந்த மென்பொருள், ஒரே உரையாடலில் உள்ள வெவ்வேறு மொழி சொற்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பேசும் திறன் படைத்தது. இந்திய பெயர்கள் மற்றும் பிராண்ட் பெயர்களை துல்லியமாக உச்சரிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

2.'பேசிலிஸ்க் இண்டஸ்ட்ரீஸ்', அமெரிக்க நிறுவனம் வசமானது



அமெரிக்காவை சேர்ந்த 'புரொவிஷன் லேப்ஸ்' நிறுவனம், மும்பையின் 'பேசிலிஸ்க் இண்டஸ்ட்ரீஸ்' எனும் ஹார்டுவேர் ஸ்டார்ட்அப் அமைப்பைக் கைப்பற்றியுள்ளது. இதன் நிறுவனர் சவுர்யா வத்வானி தலைமையிலான குழு, புரோவிஷன் நிறுவனத்தில் இணைந்து தொடு உணர்வு தொடர்பான பல்வேறு ஏ.ஐ. தொழில்நுட்பங்களை உருவாக்க உள்ளது. ரோபோக்கள் போன்ற இயற்பியல் ஏ.ஐ., அமைப்புகளுக்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதே புரோவிஷன் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.

3. மின் வாகன வசதியை விரிவாக்க 'பைக்வோ கிரீன் டெக்' ஒப்பந்தம்



மின்சார வாகன வசதிகள் மற்றும் சார்ஜிங் கட்டமைப்பை மேம்படுத்த 'பைக்வோ கிரீன் டெக்' மற்றும் 'ஈடன் கிரீன் எனர்ஜி' ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் வாயிலாக மின்சார வாகன சேவை, குத்தகை வசதிகள், ஓட்டுநர் நிர்வாகம் மற்றும் சார்ஜிங் நிலையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் தொழில் நகரங்களில் மின் வாகன இயக்கத்தை விரிவுபடுத்த ஈடன் கிரீன் எனர்ஜி இலக்கு நிர்ணயித்துள்ளது.

4. 'ரேஸர்பே' நிறுவனத்துக்கு ஐ.எப்.எஸ்.சி.ஏ., அனுமதி



நிதி தொழில்நுட்ப நிறுவனமான 'ரேஸர்பே', குஜராத் 'கிஃப்ட் சிட்டி' வாயிலாக 'ஐ.எஃப்.எஸ்.சி.ஏ.' அமைப்பிடம் இருந்து இறுதி உரிமம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக வெளி நாடுகளிலிருந்து பணம் வசூல் செய்வது, பல்வேறு நாடுகளின் நாணய கணக்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக ஆர்.பி.எல்., வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் தொழில்நுட்ப இணைப்பு பணிகளை ரேஸர்பே நிறைவு செய்துள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இச்சேவை பெரிதும் உதவும்.

5. 'ராபிடோ' ஆர்டர் ரூ.38,000 கோடியை எட்டியது



'ராபிடோ' நிறுவனத்தின் வருடாந்திர மொத்த ஆர்டர் 38,000 கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த மே மாதம் 2,280 கோடி ரூபாய் நிதி திரட்டியதை தொடர்ந்து, உணவு வினியோகத் துறையிலும் சேவையை விரிவுபடுத்தியது. இதன் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது வணிகத்தை நான்கு மடங்கு உயர்த்தியுள்ள ராபிடோ, தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 83 லட்சம் ஆர்டர்களைக் கையாண்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us