இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்
இனி கைப்பையில் வைத்து விமானத்தில் எடுத்து செல்ல வசதி புதிய நடைமுறை மே 1 முதல் அமல்
ADDED : ஏப் 26, 2025 12:30 AM

மும்பை:இந்தியாவின் நவரத்தின, ஆபரண வர்த்தகத்தின் முக்கிய மைல்கல்லாக, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு, ஆபரணங்களை விமானத்தில் கார்கோவை பயன்படுத்தாமல், கைப்பையில் வைத்து எடுத்துச் சென்று, ஏற்றுமதி செய்யும் நடைமுறை, மே 1ம் தேதி முதல் துவங்குகிறது.
இது குறித்து, இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனிநபர்கள் தங்களுடன் ஆபரணங்களை எடுத்துச் சென்று, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அனுமதிப்பது தொடர்பாக, மும்பை சுங்கத்துறை அதிகாரிகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
புதிய முயற்சியானது, குறிப்பாக வளரும் ஏற்றுமதியாளர்களுக்கு, சர்வதேச சந்தைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஆபரணங்களை எடுத்துச் செல்ல உதவும்.
மேலும், விமானத்தில் கைப்பையில் நகைகளை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் குறித்து உதவுவதற்காக, மும்பை விமான நிலையத்தில் சிறப்பு மையத்தை அமைத்து உள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வாரம் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், மாதிரி ஏற்றுமதி நடைமுறையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது.

