உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மணப்பாறை சிப்காட் தொழில் பூங்காவில் நிறுவனங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 110/33-11 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
திருச்சி மாவட்டத்தின் கோடைகால அதிகபட்ச மின் தேவை 600 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. தற்போது மணப்பாறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மாதம் கிட்டத்தட்ட 500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. இவற்றுக்கு கலிங்கப்பட்டி துணை மின் நிலையம் வாயிலாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மணப்பாறை சிப்காட்டில் பல புதிய நிறுவனங்கள் செயல்பட உள்ளதால், கூடுதல் மின் தேவையை கருத்தில் கொண்டு 5 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
