எச்.டி.எப்.சி., வங்கிக்கு துபாயில் புதிய கட்டுப்பாடு
எச்.டி.எப்.சி., வங்கிக்கு துபாயில் புதிய கட்டுப்பாடு
ADDED : செப் 28, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை அடுத்து, துபாய் சர்வதேச கிளையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்தி வைத்திருப்பதாக, எச்.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'துபாய் பைனான்சியல் சர்வீசஸ்; உத்தரவின்படி, செப்.26 முதல் வாடிக்கையாளர்கள் சேர்க்கையை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளோம்.
ஒழுங்குமுறை அமைப்பின் கவலைகளை விரைவாகச் சரிசெய்வதற்கும், எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் தடுப்பதற்கும், உறுதி பூண்டுள்ளது. இதனால், பழைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.