ADDED : ஏப் 22, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; தமிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், மதிப்பு கூட்டும் தொழில் நிறுவனங்களுக்கு தரமான விளைபொருட்கள் கிடைக்கவும், வேளாண் மதிப்பு தொடர் திட்டத்தை, டி.என்.ஏபெக்ஸ்., உருவாக்க உள்ளது.
இதன்படி, அரிசி, மாம்பழம், வாழை, கொய்யா, தக்காளி, மிளகாய், மீன் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும், அறுவடைக்கு பின் அவற்றை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் 'பிராண்டிங்' ஆகியவற்றை உள்ளடக்கிய வேளாண் மதிப்பு தொடர்களை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக, ராமநாதபுரத்தில் மிளகாய், தேனியில் வாழை ஆகியவற்றுக்கான மதிப்பு தொடர்களை உருவாக்கும் பனி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக 1.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.