ADDED : ஜூலை 26, 2025 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:குறைந்த நேரத்தில், அதிக பக்கங்களை 'பிரின்ட்' எடுக்க உதவும் வகையிலான புதிய வகை காகிதத்தை, டி.என்.பி.எல்., நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.
தமிழக செய்தித்தாள் காகித நிறுவனமான டி.என்.பி.எல்., தற் போது அச்சு மற்றும் எழு துவதற்கான, 'விவிட் பிரின்ட்' 56 ஜி.எஸ்.எம்., எனும் புதிய வகை காகிதத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதிக தடிமன் உடைய இந்த காகிதம், நோட்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பயன்படும். இதுதவிர, 70 ஜி.எஸ்.எம்., மற்றும், 75 ஜி.எஸ்.எம்., உடைய மேம்படுத்தப்பட்ட, 'காப்பியர்' காகிதங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இவை, மிக குறைந்த நேரத்தில் அதிக பக்கங்களை, 'பிரின்ட்' எடுக்க பயன்படும்.