தொழில் மலர் – 28 (கொங்குநாடு )( கால்பக்கம்) மருத்துவமனை வர முடியாதோருக்கு இல்லம் தேடி சிகிச்சை
தொழில் மலர் – 28 (கொங்குநாடு )( கால்பக்கம்) மருத்துவமனை வர முடியாதோருக்கு இல்லம் தேடி சிகிச்சை
UPDATED : அக் 07, 2026 12:15 PM
ADDED : அக் 06, 2026 06:32 PM
கோவை கொங்குநாடு மருத்துவமனை சார்பில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில், ‘இல்லம் தேடி மருத்துவ சேவை’ எனப்படும் ஹோம் ஹெல்த் கேர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு கூறியதாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளில் மருத்துவ சேவை தேவைப்படும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நோக்கில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் மருத்துவமனைக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இச்சேவை தொடங்கப்பட்டதிலிருந்து பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் தொடர்பு கொண்டு சேவை குறித்த விவரங்களை கேட்டறிந்து, பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தேவையான மருத்துவ சேவையைப் பெற இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
