நம்பிக்கை சார்ந்த வரி கொள்கை அரசுக்கு நிடி ஆயோக் பரிந்துரை
நம்பிக்கை சார்ந்த வரி கொள்கை அரசுக்கு நிடி ஆயோக் பரிந்துரை
ADDED : அக் 10, 2025 11:06 PM

புதுடில்லி:வருமான வரி தொடர்பான சிறிய குற்றங்களுக்கு தண்டனையை தவிர்க்கவும், நம்பிக்கை அடிப்படையிலான வரி நிர்வாகத்தை ஏற்படுத்தவும் நிடி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
வரிக்கொள்கை தொடர்பான ஆய்வு வரிசையில், இரண்டாவது அறிக்கையை, அரசின் கொள்கை வடிவமைப்பு ஆலோசனை அமைப்பான நிடி ஆயோக் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
வருமான வரி செலுத்தும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்
வரி விதிப்பில், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்
வழக்கில் இல்லாத குற்றங்கள் குறித்த பிரிவுகளை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்
வரி தாக்கல் நடைமுறை தவறுகளை குற்றமாக கருதக்கூடாது; வெறும் அபராதம் போதுமானது
மோசடி, திட்டமிட்ட வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே குற்ற நடவடிக்கை எடுக்கலாம்
தண்டனையை தவிர்ப்பதன் வாயிலாக, தாமாக வருமான கணக்கை தாக்கல் செய்ய ஊக்குவிக்க வேண்டும்
வரி செலுத்துவோர் மீதான வழக்குகளை குறைத்து, தேவையற்ற அத்துமீறலை தவிர்க்க வேண்டும்
வரி செலுத்துவோரின் நம்பிக்கை அடிப்படையிலான வரிக்கொள்கை அவசியம்
வருமான வரி சட்டத்தின் 13 பிரிவுகளில் 35 நடவடிக்கைகள் குற்றமாக கருதப்பட்டு, சிறை தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது