தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களை அடிச்சிக்க ஆளில்லை
தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்களை அடிச்சிக்க ஆளில்லை
UPDATED : ஜூலை 01, 2025 11:13 AM
ADDED : ஜூலை 01, 2025 06:48 AM

புதுடில்லி: தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் உலகளவில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த நிதியாண்டில் 11.51 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 14 சதவீதம் அதிகம்.
தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக, முதலிடம் வகிக்கின்றனர். கடந்த 2016 - 17ம் நிதியாண்டில் 5.18 லட்சம் கோடி ரூபாயை அனுப்பிய நிலையில், கடந்த எட்டு நிதியாண்டுகளில் இருமடங்காகி உள்ளது.
இதன் வாயிலாக, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைப்பதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தே 45 சதவீதம் பணம் அனுப்பப்படுகிறது.