இனி 'லாக் இன்' செய்யாமல் எளிதாக வருமான வரி செலுத்தலாம்
இனி 'லாக் இன்' செய்யாமல் எளிதாக வருமான வரி செலுத்தலாம்
ADDED : ஏப் 23, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வருமான வரி செலுத்தும் நடைமுறையை எளிதாக்கும் வகையில், வருமான வரித்துறை, அதன் இணைய பக்கத்தில் 'இ - பே டாக்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வருமான வரி இணையதளத்தில் 'லாக் இன்' செய்யாமலேயே, வரி செலுத்த முடியும். பயனர்பெயர், கடவுச்சொல் ஆகியவையும் தேவையில்லை.
முன்கூட்டிய வரி, சுய மதிப்பீட்டு வரி, டி.டி.எஸ்., டி.சி.எஸ்., டிபாசிட்கள் மற்றும் அபராதம், வட்டி, தாமதக் கட்டணம் போன்ற பல்வேறு வரி செலுத்தும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் இ - பே டாக்ஸ் வசதி வடிவமைக்கப்பட்டுஉள்ளது.

