ADDED : மே 20, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
26 சதவி்கிதம்
ஜெர்மனியைச் சேர்ந்த அலையன்ஸ் நிறுவனத்தின் 24,180 கோடி ரூபாய் மதிப்பிலான 26 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு, பஜாஜ் குழுமத்துக்கு இந்திய சந்தை போட்டிகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக, பஜாஜ் அலையன்ஸ் பொது மற்றும் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில், பஜாஜ் குழுமத்தின் பங்கு 100 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
50
இலங்கையைச் சேர்ந்த 'எவரெஸ்ட் இண்டஸ்ட்ரியல் லங்கா' நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை, 32 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக, வருண் பிவரேஜஸ் தெரிவித்து உள்ளது. எவரெஸ்ட் நிறுவனம் வணிக ரீதியிலான கடைகளுக்கான பிரத்யேக கூலர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. வருண் பிவரேஜஸ், இந்தியா உள்பட 9 நாடுகளில், குளிர்பானம், குடிநீர் உள்ளிட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.