ADDED : ஜூன் 05, 2025 01:23 AM

16,000
'எஸ் பேங்க்' 16,000 கோடி ரூபாய் நிதி திரட்ட, வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக 7,500 கோடி ரூபாயும்; கடன் பத்திரங்களை வெளியிட்டு 8,500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான், ஜப்பானைச் சேர்ந்த சுமிடோமோ மிட்சூய் வங்கி குழுமம், எஸ் பேங்கின் 20 சதவீத பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
428
எரிக்ஸன் இந்தியா நிறுவனம் 428.44 கோடி ரூபாய் மதிப்பிலான வோடபோன் ஐடியாவின் பங்குகளை விற்பனை செய்துள்ளது. 63.37 கோடி பங்குகள், அதாவது 1 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. சராசரியாக ஒரு பங்கு 6.76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வோடபோன் கடன் தொகையை திருப்பி வழங்குவதற்கு பதிலாக, கடந்தாண்டு ஜூன் மாதம், நோக்கியா மற்றும் எரிக்ஸன் நிறுவனங்களுக்கு 2,458 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்திருந்தது.