ADDED : ஜூன் 12, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
10
கடந்த ஆண்டில், நம்நாட்டில் இருந்து தேயிலை ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரித்ததாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 23.17 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதியான நிலையில், 2024ல் அது 25.47 கோடி கிலோவாக அதிகரித்தது. முந்தைய ஆண்டின் 9.79 சதவீத உயர்வைத் தாண்டி, 2024ல் ஏற்றுமதி 9.92 சதவீதம் உயர்ந்தது.
3,400
நாட்டின் மிகப் பழமையான டிபாசிட்டரியான என்.எஸ்.டி.எல்., 3,400 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு,புதிய பங்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.கடந்த அக்டோபரில், இதற்கான விண்ணப்பத்துக்கு செபியிடம்ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், வரும்ஜூலையில் ஐ.பி.ஓ., வெளிவரும் எனதெரிகிறது.