
3,300
அ மெரிக்காவின் ஏ.ஐ., தொழில்நுட்ப நிறுவனமான யு.எஸ்.டி., இந்தியாவின் கெய்ன்ஸ் செமிகான் உடன் கூட்டாக இணைந்து, குஜராத்தின் சனந்த் பகுதியில், 3,330 கோடி ரூபாய் முதலீட்டில், புதிய சிப் ஆலை அமைக்க திட்டமிட்டு உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு நிறுவனங்களும் இணைந்து, மின்னணு, மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க, நுகர்வோர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளன.
1,250
இ ந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில், 1,250 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக டென்மார்க்கைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் அறிவித்துள்ளது. டில்லியில் நடந்த 'வேர்ல்டு புட் இந்தியா 2025' மாநாட்டில் பங்கேற்ற இந்நிறுவனம், மஹாராஷ்டிராவில் 500 கோடி ரூபாயில் புதிய ஆலை அமைக்கவும், 400 கோடி ரூபாயில் ஹூக்ளி ஆலையையும், 350 கோடி ரூபாயில் மைசூரு ஆலையையும் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.