
40,480
இ ந்தியாவின் வாகன துறையில் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 40,480 கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராண்ட் தோர்ன்டன் பாரத் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த இவெக்கோ நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 33,440 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி, மொத்த ஒப்பந்த மதிப்பில் பெரும்பங்கு வகித்தது. இந்த ஒப்பந்தத்தை தவிர்த்து பார்த்தால், கடந்த ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் ஒப்பந்த மதிப்பு 36 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
300
இ ந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் விரைவில் 300 கிகாவாட்டை எட்டும் என மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 256 கிகாவாட்டை எட்டியுள்ளதாகவும், 40 கிகாவாட்டுக்கும் அதிக திறன் கொண்ட ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள 256 கிகாவாட் திறனில், 50 கிகாவாட் திறன் கொண்ட பெரிய நீர் மின்சார திட்டங்களும்; 8.78 கிகாவாட் திறன் கொண்ட அணு சக்தி திட்டங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.