
500
நெதர்லாந்தைச் சேர்ந்த பிராட்பேண்டு சாதனங்கள் தயாரிப்பாளரான ஜி.எக்ஸ் குரூப், இந்தியாவில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் போட்டோனிக்ஸ் மற்றும் சிப் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இந்த ஆலையில், 5 ஜி, 6 ஜி பிராட்பேண்டு சேவைகளில் பயன்படுத்தப்படும் போட்டோனிக்ஸ் மாடூல்ஸ் உடன், ஆண்டுக்கு 30 லட்சம் சிப்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. இதனால், 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்து உள்ளது.
7,000
அடுத்த மூன்று ஆண்டுகளில், 5 கிகா வாட் சோலார் பேனல்கள் வினியோகிப்பது தொடர்பாக சீனாவின் லாங் ஐ கிரீன் எனர்ஜி, இந்தியாவின் ஐநாக்ஸ் சோலார் நிறுவனத்துடன் 7,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்திய சந்தைக்காக லாங் ஐ கிரீன் எனர்ஜி இதை கொள்முதல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை தொடர்ச்சி யாக வளர்ந்து வரும் நிலையில், குஜராத், ஒடிஷாவில் புதிய ஆலை அமைக்க ஐநாக்ஸ் சோலார் திட்டமிட்டு உள்ளது.
6 ,200
தனியார் துறையை ச் சேர்ந்த பெடரல் வங்கியின் 9.99 சதவீத பங்குகளை, 6,200 கோடி ரூபாய்க்கு வாங்க, நியூயார்க்கைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் திட்டமிட்டு உள்ளது. ஒரு பங்கின் விலை 227 ரூபாய் வீதம், 27.29 கோடி பங்குகளாக மாற்றக்கூடிய வாரன்ட்களை வெளியிட உள்ளது.
பங்குதாரர்களின் ஒப்புதலை பெற, வரும் நவ., 19ல் அவசர பொதுக்கூட்டத்தை அது கூட்டி உள்ளது. சமீபத்தில் ஆர்.பி.எல்., வங்கியின் 60 சதவீத பங்குகளை கையகப்படுத்த இருப்பதாக எமிரேட்ஸ் என்.பி.டி., அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

