
13,200
இ ந்தாண்டு இறுதிக்குள் 8,800 கோடி முதல் 13,200 கோடி ரூபாய் மதிப்புக்கு எல்.ஐ.சி., பங்குகளை விற்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. செபி விதிகளின்படி, பொது பங்குதாரர்களின் பங்களிப்பை 10 சதவீதமாக அதிகரிப்பது கட்டாயம். இதனை நிறைவேற்றுவதற்கான ஒரு பகுதியாக தன் வசமுள்ள பங்குகளை அரசு விற்க உள்ளது. கடந்த 2022ல் 3.50 சதவீத எல்.ஐ.சி., பங்குகளை விற்று, அரசு 20,557 கோடி ரூபாய் முதலீடு திரட்டியது.
2,00,000
ந டப்பு நிதியாண்டில், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளின் கடன் வழங்கல் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, 16 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கணித்துள்ளது. நுண் நிதி அல்லாத துறையில் அதிகரித்த கடன்கள், நுண் கடன்களின் மீட்சி ஆகியவை காரணமாக, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளின் கடன் வழங்கல் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.
5,000
சவுதி அரேபியாவில் கிட்டத்தட்ட 2,500 கோடி முதல் 5,000 கோடி ரூபாய் வரை மதிப்பிலான திட்டங்களுக்கான ஆர்டரை, கட்டுமான நிறுவனமான எல் அண்டு டி., கையகப்படுத்தி உள்ளது. முதலாவது ஆர்டர் புதிய துணை மின்நிலையம் அமைப்பதற்கும், இரண்டாவது ஆர்டர் 420 கி.மீ., நீளமுள்ள மின் இணைப்பு வழித்தடம் அமைப்பதற்கும் பெற்றுள்ளதாக மும்பை பங்கு சந்தையில் அது தெரிவித்துள்ளது.
1,422
ஹே வல்ஸ் இந்தியா உட்பட பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து, 1,422 கோடி ரூபாய் முதலீட்டை சோலார் பேனல் தயாரிப்பாளரான கோல்டி சோலார் திரட்டி உள்ளது. இதனை ஆலை விரிவாக்கத்துக்கும், சோலார் தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்துவதற்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

