3,196
க டந்த நிதியாண்டில், 'ஆப்பிள் இந்தியா'வின் லாபம் 16 சதவீதம் அதிகரித்து, 3,196 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில், இந்நிறுவனத்தின் லாபம் 2,746 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 79,378 கோடி ரூபாயாகவும்; மொத்த செலவு 75,191 கோடி ரூபாயாகவும் இருப்பதாக 'டோப்ளர்' நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.58
அ மெரிக்காவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக, 8.58 சதவீதம் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி 8.58 சதவீதமாக சரிந்து, 55,440 கோடி ரூபாயாக உள்ளது. இதே காலத்தில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி, 13.89 சதவீதம் அதிகரித்து, 39,248 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
17
ந டப்பு ராபி பருவத்தில், நவ.11ம் தேதி நிலவரப்படி, நாட்டின் கோதுமை பயிரிடும் பரப்பளவு 17 சதவீதம் அதிகரித்து, 66.23 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உள்ளது. பருவமழை மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு காரணமாக, நடப்பு பருவத்தில் கோதுமை பயிரிடும் பரப்பளவு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், கோதுமை பயிரிடும் பரப்பளவு, 56.55 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

