48,463
க டனில் மூழ்கியுள்ள ஐ.எல் அண்டு எப்.எஸ்., குழுமம், கடந்த செப்டம்பரில், கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு 48,463 கோடி ரூபாயை திரும்ப செலுத்தி உள்ளது.
61,000 கோடி ரூபாய் கடன் மறுசீரமைப்பு இலக்கு நிர்ணயித்த இந்நிறுவனம், சொத்துகளை பணமாக்குதல் , இடைக்கால பங்கீடுகள் வாயிலாக கிடைத்த தொகையை, கடனை திருப்பி செலுத்த பயன்படுத்தி உள்ளது. இதன்படி, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., தன் மொத்த கடனில் நான்கில் மூன்று பங்குக்கு தீர்வு கண்டுள்ளது.
98,000
அ மெரிக்காவை சேர்ந்த டிஜிட்டல் ரியால்ட்டி, ரியல் எஸ்டேட் குழுமமான புரூக்பீல்டு மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான டிஜிட்டல் கனெக்ஸன், ஆந்திராவில் வரும் 2030ம் ஆண்டுக்குள் 98,000 கோடி ரூபாய் முதலீட்டில், 1 ஜிகாவாட் தரவு மையத்தை அமைக்க உள்ளது. விசாகப்பட்டினத்தில் கிட்டத்தட்ட 400 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஐ., அடிப்படையிலான புதிய தரவு மையம் அமைக்க உள்ளது.
2
தே சிய பங்கு சந்தையில், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, டி.வி.எஸ்., மோட்டார், மாருதி சுசூகி இந்தியா, அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன. வலுவான கிராமப்புற பொருளாதாரம், சாதகமான பருவமழை ஆகியவை காரணமாக, நடப்பு நிதியாண்டில் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என நம்பிக்கை காரணமாக வாகன நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.

