
1,000
ஓ லா எலக்ட்ரிக், தன் விற்பனைக்கு பிந்தைய சேவை பிரிவை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, 1,000 சீனியர் தொழில்நுட்ப பணியாளர்களை பணி அமர்த்த திட்டமிட்டு உள்ளது.
நாடு முழுதும் முக்கிய சந்தைகளில், பல வாரங்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்க ஹைபர் சர்வீஸ் திட்டத்தை இந்தாண்டு ஆரம்பத்தில் துவங்கியது.
இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் அடுத்தகட்டமாக அனுபவமிக்க பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. இதன் வாயிலாக இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைப்பிரிவு பணியாளர்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர உள்ளது.
3
ப ஞ்சாபின் மொஹாலியில் உள்ள அரசுக்கு சொந்தமான சிப் தயாரிப்பு ஆலையின் செமிகண்டக்டர் லெபாரட்டரியை 4,500 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, மூன்று கட்ட தொகுப்புகளுக்கு நடந்த ஏலத்தில், டாடா செமிகண்டக்டர் மேனுபேக்சரிங், ஹைதராபாதைச் சேர்ந்த சைன்ட் செமிகண்டக்டர்ஸ் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அப்ளைடு மெட்டீ ரியல்ஸ் ஆகிய நிறு வனங்கள், குறைந்த விலையை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

