
5,00,000
நா ட்டின் மின்சார பகிர்மான திறன் 5 லட்சம் சர்க்கியூட் கிலோ மீட்டரை கடந்துள்ளது. இது 220 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மின்கம்பிகளை மட்டுமே உள்ளடக்கியது.
கடந்த 2014 ஏப்ரலில், 2.09 லட்சம் சர்க்கியூட் கிலோ மீட்டரில் இருந்து, 71.60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் கூடுதல் 67,000 சர்க்கியூட் கிலோ மீட்டர், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
4,000
நா ட்டின் நிகர அன்னிய நேரடி முதலீடு, தொடர்ச்சியாக நான்காவது மாதமாக கடந்த நவம்பரிலும் சரிவை கண்டுள்ளது. கிட்டத்தட்ட 4,014 கோடி ரூபாய் முதலீடு வந்த போதிலும், அதனை விட அதிகளவு அன்னிய நேரடி முதலீடு வெளியேறி உள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளன.
22.50
க டந்தாண்டில் நம் நாட்டின் காபி ஏற்றுமதி, 4.47 சதவீதம் சரிந்த போதிலும், மதிப்பு அடிப்படையில் 22.50 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2024ல், 4. 02 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2025ல் 4.47 சதவீதம் குறைந்து, 3.84 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.
அதே நேரம், முந்தைய ஆண்டு காபி விலை, டன் ஒன்றுக்கு 3.48 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், இது, 2025ல் 4.65 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. இதன் காரணமாக, ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துள்ளது.

