ADDED : ஜூலை 04, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான என்விடியா பெயர் பெறுகிறது. நியூயார்க் பங்கு சந்தையில் சமீபத்தில் என்விடியாவின் சந்தை மூலதனம் 333 லட்சம் கோடி ரூபாயை எட்டியதையடுத்து, மதிப்பு அடிப்படையில் உலகின் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது.
ஏ.ஐ., தரவு மையங்களை உருவாக்குவதில்என்விடியா தயாரிக்கும் செமிகண்டக்டர்களின் தேவை அதிகரித்துஉள்ளது.
கடந்த 2021ல், 42.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த என்விடியாவின் சந்தை மதிப்பு, கடந்த நான்கு ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக மைக்ரோசாப்ட் 314 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடனும்; 270 லட்சம் கோடி ரூபாயுடன் ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.