முதலிடத்தை இழந்த ஆப்பிள் பின்னுக்கு தள்ளியது என்விடியா
முதலிடத்தை இழந்த ஆப்பிள் பின்னுக்கு தள்ளியது என்விடியா
ADDED : அக் 26, 2024 11:20 PM

நியூயார்க்:உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில், ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, என்விடியா முதலிடம் பிடித்துள்ளது.
அமெரிக்க பங்கு சந்தையில், சந்தை மதிப்பு அடிப்படையில் ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா நிறுவனங்கள் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த ஜூனில் என்விடியா மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
ஆனால், குறுகிய காலத்தில் அதை மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளின.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் என்விடியா சிப்களுக்கு தேவை அதிகரித்ததால், இந்நிறுவனத்தின் பங்கு அக்டோபரில் 18 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
மொத்த சந்தை மதிப்பு 296.52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததால், உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது. அதே நேரம், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 295.68 லட்சம் கோடி ரூபாயாக நெருக்கத்தில் உள்ளது.
நிறுவனங்கள் சந்தை மதிப்பு (ரூபாயில்)
என்விடியா - 296.52 லட்சம் கோடி
ஆப்பிள் - 295.68 லட்சம் கோடி
மைக்ரோசாப்ட் - 268.80 லட்சம் கோடி