தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இறக்குமதி வரியை குறைத்தும் எண்ணெய் விலை உயர்வு

இறக்குமதி வரியை குறைத்தும் எண்ணெய் விலை உயர்வு

இறக்குமதி வரியை குறைத்தும் எண்ணெய் விலை உயர்வு


UPDATED : அக் 07, 2026 02:13 AM

ADDED : அக் 06, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 02:13 AM ADDED : அக் 06, 2026 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தும், பண்டிகை சீசன் துவங்கியுள்ள நிலையில், சமையல் எண்ணெய் வகைகளின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. லிட்டருக்கு, 10 - 20 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரதாசன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகைக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதை தொடர்ந்து, சமையல் எண்ணெணய் விற்பனை அதிகரித்துள்ளது.

அதேசமயம் கடந்த மாதத்தை விட, எண்ணெய் விலை லிட்டருக்கு, 10 - 20 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச போர் மற்றும் பருவநிலை மாற்றங்கள் என பாதிப்பு இருந்தாலும், எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. கடந்த செப்.,24ல், மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை குறைத்துள்ளது.

அதன்படி, சுத்திகரிக்கப்படாத பாமாயில் மற்றும் சோயா எண்ணெய்க்கு, இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு செய்யப்படாத சூரியகாந்தி எண்ணெய்க்கு, 10 சதவீத இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினார்.

Image 1627286

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us