sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தமிழகத்தில் இரண்டில் ஒரு 'ஸ்டார்ட் அப்' மகளிரால் நடத்தப்படுகிறது: அன்பரசன்

/

தமிழகத்தில் இரண்டில் ஒரு 'ஸ்டார்ட் அப்' மகளிரால் நடத்தப்படுகிறது: அன்பரசன்

தமிழகத்தில் இரண்டில் ஒரு 'ஸ்டார்ட் அப்' மகளிரால் நடத்தப்படுகிறது: அன்பரசன்

தமிழகத்தில் இரண்டில் ஒரு 'ஸ்டார்ட் அப்' மகளிரால் நடத்தப்படுகிறது: அன்பரசன்


UPDATED : அக் 04, 2025 12:55 AM

ADDED : அக் 04, 2025 12:53 AM

Google News

UPDATED : அக் 04, 2025 12:55 AM ADDED : அக் 04, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தமிழகத்தில், 12,171 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், 6,063 பெண்கள் தலைமையில் செயல்படுகின்றன; தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு, 2.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,'' என, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

Image 1477497


சென்னை நந்தனத்தில் அமைச்சர் அன்பரசன், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Image 1477498


அன்பரசன் அளித்த பேட்டி:

தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை, உலகளவில் உயர்த்திடவும், அவற்றுக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவும் நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு, கோவையில் வரும், 9, 10ம் தேதிகளில் நடக்கிறது. இதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

மாநாட்டில், 39 நாடுகளில் இருந்து, 264 பங்கேற்பாளர்களுடன், 30,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

இதனால், 2021ல், 2,032 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது, 12,171 நிறுவனங்களாக அதிகரித்து, நாட்டில் முன்னணியில் உள்ளது. புத்தொழில் மாநாட்டில் மத்திய அரசின் நிறுவனங்கள், ஜெர்மனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம், உணவு தொழிலில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கம்

மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 25 சதவீதம் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்தவை

தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாய்






      Dinamalar
      Follow us