உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 22, 2026 05:29 PM
ADDED : அக் 22, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
கேள்வி: சுங்கத்துறையில் சரக்கு தடுத்து வைக்கப்பட்டால், டிமரேஜ் செலவை எப்படி குறைக்கலாம்?
பதில்:
சுங்கத்துறையில் சரக்கு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படும் நிலை ஏற்பட்டால், சுங்க சட்டத்தின் பிரிவு 49ன் கீழ் அந்த சரக்கை பொது கிடங்குக்கு மாற்ற அனுமதி கோரலாம். அங்கு முதலில் 30 நாட்கள் வரை சரக்கை வைத்திருக்க அனுமதி கிடைக்கும்; தேவையெனில் மேலும் 30 நாட்கள் வீதம் கால நீட்டிப்பும் பெறலாம். கிடங்கு வாடகை மற்றும் கையாளும் செலவு, டிமரேஜ் கட்டணத்தை விட குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு முன் ஏற்கெனவே ஏற்பட்ட டிமரேஜ் கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
டி.என்.சி. ராஜகோபாலன்
ஏற்றுமதி–இறக்குமதி மற்றும் சுங்க விவகார நிபுணர்
