ADDED : ஜூலை 05, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ராணுவத்திற்கு குண்டு துளைக்காத நவீன உடல் கவசம் மற்றும் ஹெல்மெட்டுகளை பெற, எஸ்.எம்.பி.பி., என்ற ராணுவ உற்பத்தி நிறுவனத்திடம், 300 கோடி ரூபாய்க்கு இரு ஆர்டர்களை ராணுவம் வழங்கி உள்ளது.
மொத்தம், 27,700 குண்டு துளைக்காத உடல் கவசங்களையும், 11,700 ஹெல்மெட்களையும் இந்நிறுவனம் வினியோகிக்கும். ராணுவ வீரர்கள் உடல் கவசத்தை சவுகரியமாக அணியும் வகையிலும், குண்டு பாயும் தாக்கத்தை உள்வாங்காத வகையிலும் இந்த உடல் கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட், ஏ.கே., 47 ரக துப்பாக்கியின் தோட்டாக்களையும் தாங்கும்.
ராணுவ உடல் கவசங்கள், ஹெல்மெட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவன ஆலை, ஹரியானாவின் பல்வால் பகுதியில் அமைந்துள்ளது.