ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / வர்த்தகம் / பொது / நிறுவன துளிகள் / நிறுவன துளிகள்
/
செய்திகள்
பொது
நிறுவன துளிகள்
ADDED : ஜூலை 25, 2025 01:00 AM
சென்னையில் நவீன ஆலை : மரப் பலகைத் தொழிலில் ஈடுபட்டு வரும் செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் (இந்தியா) நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் 'பார்ட்டிக்கிள் போர்டு' எனப்படும் மரத் துகள் பலகை தயாரிப்புக்கான நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு 800 கன மீட்டர் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இதன் வாயிலாக, மரத் துகள் பலகை உற்பத்தியில், நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் உருவெடுத்துள்ளது.
நெஸ்லேக்கு புதிய தலைவர் உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக மனீஷ் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வரும் சுரேஷ் நாராயணன், இம்மாதத்துடன் பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மனீஷ் திவாரி, வரும் 2030 ஜூலை மாதம் வரை நெஸ்லே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மேல்முறையீடு இந்திய சந்தை போட்டி ஆணையத்துக்கு எதிரான வழக்கில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, கூகுள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. ஆன்ட்ராய்டு கட்டமைப்பில் தனது ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தி, நியாயமற்ற பிளே ஸ்டோர் விதிமுறைகள் மற்றும் கூகுள் பிளே செயலியின் பயன்பாட்டை ஊக்குவித்ததாக, கூகுள் மீதான விசாரணையில் இந்திய போட்டி ஆணையம் தெரிவித்திருந்தது. இதை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது.