ADDED : ஏப் 24, 2025 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சமீபத்தில் மறைந்த சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர், ஒசாமு சுசூகியை கவுரவிக்கும் வகையில், அவரது பெயரில் குஜராத் மற்றும் ஹரியானாவில் புதிய திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, மாருதி சுசூகி மற்றும் ஜப்பானின் சுசூகி மோட்டார் நிறுவனங்கள் இணைந்து அமைக்க உள்ளன.
உற்பத்தி வளர்ச்சியையும், வாகன உதிரிபாக வினியோகர் உற்பத்தி தரத்தையும் அதிகரிப்பது, வினியோக தொடர் போட்டித் தன்மையை சர்வதேச அளவுக்கு உயர்த்துவது, ஜப்பானிய முறைப்படி வாகன கட்டமைப்புகளை உருவாக்கி, பயிற்சி திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடைய உதவும் வகையில், இந்த திறன் மேம்பாட்டு மையம் துவங்கப்பட்டுள்ளது.

