ADDED : அக் 29, 2025 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனில் உலகிலேயே 4வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
நம் நாட்டில் 2014ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 81 ஜிகாவாட்டாக இருந்தது. இது, தற்போது 3 மடங்கு உயர்ந்து, 257 ஜிகாவாட்டாக ஆகியுள்ளது. சூரிய எரிசக்தி உற்பத்தியில் நம் நாடு அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. 2014ல் 2.80 ஜிகாவாட்டாக இருந்த சூரிய எரிசக்தி உற்பத்தி, தற்போது 128 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே நிர்ணயித்திருந்த இலக்கை, 5 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா எட்டிவிட்டது. நம் நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கட்டணம் உலகிலேயே மிகக்குறைவானது.
இவ்வாறு அவர் கூறினார்.

