தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஸ்டீல் கழிவில் இருந்து பெயின்ட் உற்பத்தி

ஸ்டீல் கழிவில் இருந்து பெயின்ட் உற்பத்தி

ஸ்டீல் கழிவில் இருந்து பெயின்ட் உற்பத்தி


UPDATED : நவ 25, 2026 07:36 PM

ADDED : நவ 25, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 07:36 PM ADDED : நவ 25, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டீல் ஆலைகளில் வெளியேறும் அமிலக் கழிவை பயனுள்ள மூலப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பத்தை, சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பம் கடந்த செப்டம்பரில் தொழில் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சி.எஸ்.ஐ.ஆர்., தெரிவித்ததாவது:

ஸ்டீல் பொருட்களின் மேற்பரப்பில் உள்ள துரு, அழுக்கை அகற்ற அமிலம் பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் இரும்பு கலப்பதால் அமிலத்தின் சுத்திகரிப்பு திறன் குறைந்து கழிவாகிறது. அதில் உள்ள இரும்பு, குளோரைடு ஆகியவற்றை பிரித்தெடுத்து, வணிக பயன்பாட்டுக்கான பொருட்களாக மாற்ற முடியும். இதனால், அமிலக்கழிவை நேரடியாக வெளியேற்றுவதை தவிர்க்கலாம். கழிவில் உள்ள பயனுள்ள பொருட்களை மீட்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள

பயன்கள்


இரும்பு ஆக்சைடு: பெயின்ட், கட்டுமான பொருட்களுக்கு நிறமூட்ட பயன்படும்.
அமோனியம் குளோரைடு: உரத்தொழிலில் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்.
சுத்திகரித்த நீர்: தொழிற்சாலையில் மீண்டும் பயன்படுத்த வாய்ப்பு.



ஒரு டன் ஸ்டீல் உற்பத்தியில் 30 முதல் 60 லிட்டர் வரை அமில கழிவு உருவாகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us